/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/29_28.jpg)
'ரௌடி பிக்சர்ஸ்' தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கனெக்ட்'. 'மாயா' திரைப்படத்தைஇயக்கிய அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் அனுபம் கெர், ஹனியா நபிஷா, சத்யராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், 'கனெக்ட்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் மொத்தம் 99 நிமிடங்கள் தான் எனவும் இடைவேளை இல்லாமல் இப்படம் வெளியாகவுள்ளது எனவும் படக்குழு அறிவித்துள்ளது. ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள வருகிற இப்படம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளமொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, இந்தியில் 'ஜவான்', மலையாளத்தில் 'கோல்ட்', தமிழில் ஜெயம் ரவி நடிப்பில், அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படத்திலும், துரைசெந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)